வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 319-ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இந்த சோகமான நிகழ்வில் இறந்தோருக்கு ஆழ்ந்த இரங்கல். நிலச்சரிவில் அன்புக்குரியவர்களை இழந்துவாடும் குடும்பங்களுக்கு எங்கள் பிரார்த்தனைகள். பேரிடரில் சிக்கலான மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களின் துணிச்சல், தைரியத்தை நாங்கள் பாராட்டுகிறோம். மக்களை தொடர்ந்து பாதுகாப்போம். இந்த இக்கட்டான நேரத்திலும் நமது எண்ணங்களில் இந்தியா உள்ளது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.