Connect with us

Raj News Tamil

கோடை வெயிலினால் வரும் நோய்களிலிருந்து சமாளிக்க வேண்டிய வழிமுறைகள்!

ஆரோக்கியம்

கோடை வெயிலினால் வரும் நோய்களிலிருந்து சமாளிக்க வேண்டிய வழிமுறைகள்!

வெயில் காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் முதன்மையாக பார்க்கப்படுவது நீரிழப்பு நோய் இது எளிதில் தவிர்க்ககூடி ஒன்றுதான். இதய நோய் சிறுநீரக நோய், தசை இறுக்கம் போன்ற நோய்கள் வெயிலின் தாக்கத்தால் வரக்கூடும்.

இதுமட்டுமின்றி வெப்பத்தின் தாக்கத்தால் ரத்த தானத்தின் சுருக்கம் அடைந்து அதனால் சுயநினைவு இழக்கும் அளவிற்கு பாதிப்பு ஏற்படும்.

காய்ச்சிய குடிநீர் அருகுவது, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வதால் நீர் பிணைப்பு நோய் வருவதை தடுக்கலாம். சிறுநீரக பாதிப்பு உடையவர்கள் குறிப்பாக சுடுதண்ணீர் அருந்துவது மிக நல்லது.

வெயில் காலத்தில் அம்மை போடுவது வழக்கமான ஒன்று முன்பே வந்தவர்களுக்கு மறுபடியும் வருவது சாத்தியமற்றது, தடுப்பூசி போடாத குழந்தைகளுக்கு வரக்கூடும், அம்மை நோய் காற்றில் பரவக்கூடியது இது அதிகமாக வெயில் காலத்தில் பறவக்கூடியது.

வெயில் காலத்தில் இருந்து கையாள வேண்டிய நடைமுறைகள்;-

உடற்பயிற்சி செய்பவர்கள் எப்பொழுதுமே அருந்தும் தண்ணீரை விட கூடுதலாக தண்ணீர் அருந்துவது நல்லது.

உடைகளை இறுக்கமாக அணியாமல் நன்றாக காற்று போகும் அளவிற்கு அணிய வேண்டும், கருப்பு நிற ஆடைகளை தவிர்ப்ப நல்லது, அப்படி இருந்தால் தோளில் வரக்கூடிய புஞ்சை தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

வெயில் காலத்தில் இரவு நேரங்களில் குளித்துவிட்டு தூங்கச் செல்வது நமது தோலுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும்.

வெயில் காலத்தில் நீச்சல் குளத்தில் நீந்துவது நமது உடலின் உஷ்ணத்தை நீக்கி உடலுக்கு சிறந்த உடற்பயிற்சியாகும்.

உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும் மாம்பழம், அன்னாச்சி பழம், பலாப்பழம் போன்ற பழங்களை வெயில் காலத்தில் உண்பதை தவிர்க்க வேண்டும். தர்பூசணி அதற்கு பதில் உடல் உஷ்ணத்தை குறைக்கும் தர்பூசணி கிர்ணி வெள்ளரிக்காய் போன்றவற்றை உட்கொள்வது நல்லது.

காலை 11 மணி முதல் 4 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். சூரிய வெப்ப தாக்குதலில் இருந்து வரப்படும் தோல் எரிச்சல் தோல் உரிவது போன்றவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சன் ஸ்கிரீன் பூசிக்கொண்டு வெளியே செல்ல வேண்டும்.. சன் ஸ்கிரீன் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.

வெயில் காலத்தில் அதிகமாக குளிர்சாதனை பெட்டிகளை பயன்படுத்துவதனால் எவ்வித நோய்களும் ஏற்படாது ஆனால் குளிர்சாதன பெட்டிகளை முறையாக சுத்திகரித்து பயன்படுத்த வேண்டும்.

வெயில் காலத்தில் கர்ப்பமானவர்கள் தங்களது உடலை மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் கவனித்துக் கொள்வது நல்லது.

Continue Reading
Advertisement
You may also like...

More in ஆரோக்கியம்

To Top