Connect with us

Raj News Tamil

கடுமையான வெயிலை சமாளிக்க கையாள வேண்டிய வழிமுறைகள்!

ஆரோக்கியம்

கடுமையான வெயிலை சமாளிக்க கையாள வேண்டிய வழிமுறைகள்!

கோடை காலத்தில் உடலின் தண்ணீர் அளவை சரியான அளவில் வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

உடல் சூடு அதிகம் உள்ளவர்களுக்கு, வெயில் காலத்தில் இன்னும் சூடு அதிகரிக்கும். நீர்ச்சத்து குறைவதால், வயிறு இழுத்துப் பிடித்தல், அடிவயிற்று வலி, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

இதற்கு நீர்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகள், இளநீர், நீர்மோர் நிறைய எடுத்துக்கொள்வதன் மூலம், இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

சர்கரை உள்ள பழச்சாறு அதிகம் எடுத்துக்கொண்டால் உடல் எடை அதிகரிப்பது, சர்கரை நோய், இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

வெயில்காலத்தில் உடல்பயிற்சி செய்வதை தவிர்க்ககூடாது, எனவே காலை 5.30 மணியளவு அல்லது மாலை நேரத்தில் உடல்பயிற்சி மேற்கொள்வது வழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

உடல்பயிற்சி நேரத்நில் உடலுக்கு இருக்கமான உடையை அணிவது தவிர்க் வேண்டும். ஒரு நாளைக்கு தண்ணீர் 2 லிட்டரில் இருந்து 3 லிட்டர் கட்டாயம் குடிக்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் 500 லிட்டரும் அன்றயநாள் முடிவுக்குள் 3 லிட்டர் அருந்த வேண்டும், சீரக தண்ணீர் அருந்துவது மிக நன்மை.

குழந்தைகள் விளையாடுவதற்கு முன்பு நீர் அதாயத்தை கோடுத்து விளையாட அனுப்ப வேண்டும். முதியவர்களுக்கு வெயில் காலத்தில் செரிமானம் பிரச்சணை இருப்பவர்களுக்கு தண்ணீர் குடிக்க தோன்றாது இதற்கு கஞ்சி கூல் மோர் எலுமிச்சை சாறு இது போன்றவை அருந்தலாம்.

வெளி உணவுகளை தவிர்த்து விட்டு வீட்டில் சமைப்பதை உண்ண வேண்டும். வெளி உணவுகளை அருந்துவதால் பல வகையான நோய்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. வெளியே செல்லும் பொழுது வீட்டில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் எடுத்துச் செல்வது நல்லது.

இதயம், கிட்னி பிரச்சணை உள்ளவர்கள் அவர்களது மருத்துவரை அனுகி தேவையான அளவு உணவுமுறையை கையாள்வது நல்லது.

Continue Reading
Advertisement
You may also like...

More in ஆரோக்கியம்

To Top