“நாங்கள் இதை அணிய மாட்டோம்” – சீக்கிய இளைஞரை அடித்த அமெரிக்க நபர்!

டர்பன் அணிந்திருந்த சீக்கிய இளைஞரை, 26 வயதான அமெரிக்க இளைஞர் தாக்கிய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரை சேர்ந்தவர் கிரிஸ்டோபர் பெலிப்பிக்ஸ். 26 வயதான இவர், அந்நாட்டு அரசுப் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.

அப்போது, அதே பேருந்தில் 19 வயதான சீக்கிய மதத்தை சேர்ந்த இளைஞரும் பயணித்துள்ளார். மேலும், அவர் தனது தலையில், டர்பனும் அணிந்திருந்துள்ளார்.

இந்நிலையில், சீக்கிய மதத்தை சேர்ந்த இளைஞரை பார்த்த கிரிஸ்டோபர், “எங்கள் நாட்டில் டர்பனை அணிய மாட்டோம்” என்று கூறியுள்ளார்.

மேலும், அவரது தலையிலும், முகத்திலும் கடுமையாக தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பியோடி உள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த விசாரணையில், கிரிஸ்டோபர் குறித்து அதிர்ச்சி தகவல்கள் கசிந்தது. அதாவது, வழிபறியில் ஈடுபட்டதற்காக, இரண்டு வருடங்களாக சிறைத் தண்டனையை பெற்றவர் தான் கிரிஸ்டோபராம்.

கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை மாததத்தின்போது, பரோலில் வெளியே வந்த இவர், தற்போது இந்த குற்றத்தை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, கிரிஸ்டோபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News