டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும், ஒரே கட்டமாக, கடந்த 5-ஆம் தேதி அன்று, தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான, வாக்கு எண்ணும் பணி, இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. தற்போது வந்துள்ள நிலவரப்படி, பெரும்பான்மைக்கு தேவையான 38 இடங்களை காட்டிலும், 46 இடங்களில், பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
ஆம் ஆத்மி 24 இடங்களில் முன்னிலையிலும், காங்கிரஸ் முன்னிலையே இல்லாத நிலையிலும் இருந்து வருகின்றன. அதிக இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருவதால், தொண்டர்கள் தங்களது வெற்றிக் கொண்டாட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில், பாஜகவின் தலைவர் ராதிகா கேரா, பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், நாங்கள் பிரச்சாரத்திற்கு சென்றபோது, களத்திலேயே தேர்தல் முடிவுகளை பார்த்துவிட்டோம் என்று தெரிவித்தார். மேலும், தாமரை மலரும், பாஜக ஆட்சியை அமைக்கும் என்றும், அவர் தெரிவித்தார்.