இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (திங்கள்கிழமை) கூடிய நிலையில், தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்ததால் சலசலப்பு ஏற்ப்பட்டது. அவர் புறக்கணித்த உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
அதில் அவர் குறிப்பிட்டதாவது:- ”பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. சர்வதேச அளவில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
மிக்ஜாம் புயல் மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளின்போது தமிழ்நாடு திறம்பட செயல்பட்டது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாடு ஒருபோதும் அமல்படுத்தப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறது.
மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சேர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும்.
1.15 கோடி பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்குகிறோம். புதுமைப்பெண் திட்டத்தின் எதிரொலியாக உயர்கல்வியில் பெண்கள் சேர்வது 35% அதிகரித்துள்ளது.
2 லட்சம் புதிய வேளாண் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டை பல்வேறு வகைகளில் மத்திய அரசு புறக்கணிக்கிறது என தனது உரையில் குறிப்பிட்டார்.