Connect with us

Raj News Tamil

நாம் ஒரு நொடியைக்கூட வீணடிக்கக்கூடாது: பிரதமர் மோடி!

இந்தியா

நாம் ஒரு நொடியைக்கூட வீணடிக்கக்கூடாது: பிரதமர் மோடி!

சீக்கியர்களின் பத்தாவது குரு கோபிந்த் சிங்கின் 4 மகன்களில் இளையவர்களான பாபா ஜோராவர் சிங் மற்றும் பாபா ஃபதே சிங் ஆகியோரின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் வீர் பால் திவஸ் கடந்த ஆண்டு முதல் நினைவுகூறப்பட்டு வருகிறது.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, “இந்திய சிந்தனையைக் காக்க எந்த அளவுக்கும் செல்ல முடியும் என்பதற்கு அடையாளமாக பாபா ஜோராவர் சிங் மற்றும் பாபா ஃபதே சிங் ஆகியோரின் தியாகங்கள் உள்ளன. வீர் பால் திவஸ் நிகழ்ச்சிகள் தற்போது அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், கிரீஸ் ஆகிய நாடுகளிலும் நடத்தப்படுகிறது. நாம் நமது தேசத்தின் தொன்மத்தின் மீது பெருமை கொள்வதால், மற்ற நாடுகள் நம்மை வேறுபடுத்திப் பார்க்கத் தொடங்கி இருக்கின்றன. இந்தியா அதன் மக்களிடம் உள்ள திறமை மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறது.

நாம் ஒரு நொடியைக்கூட வீணடிக்கக்கூடாது. இதற்கான பாடத்தை நமது குருமார்கள் நமக்கு போதித்திருக்கிறார்கள். நமது தேசத்தின் பெருமையை பாதுகாப்பதாகவும், அதை மறுநிர்மாணம் செய்வதாகவும் நமது நோக்கம் இருக்க வேண்டும். நாடு இன்னும் மேம்பட்ட நிலையை அடைய நாம் பாடுபட வேண்டும். குரு கோபிந்த் சிங்கின் அன்னை மற்றும் 4 மகன்களின் தியாகம் நமக்கு ஊக்கமூட்டுவதாக உள்ளது” என தெரிவித்தார்.

More in இந்தியா

To Top