தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக பணியாற்றி வருபவர் சினேகன். பல்வேறு ஹிட் பாடல்களை எழுதியுள்ள இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கன்னிகா என்ற நடிகையை திருமணம் செய்துக் கொண்டார்.
இந்நிலையில், இந்த தம்பதியினர் இணைந்து, தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், நாங்கள் இருவரும் பெற்றோர் ஆகப் போகிறோம் என்று கூறியுள்ளனர். இவர்களது இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், அந்த தம்பதிக்கு, தங்களது வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.