Connect with us

Raj News Tamil

நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி! – மம்தா பானர்ஜி அறிவிப்பு

இந்தியா

நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி! – மம்தா பானர்ஜி அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களது பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஆளும் பாஜகவை வரும் தேர்தலில் தோற்கடிக்க காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற கூட்டணியை அமைத்துள்ளன.

இந்த கூட்டணியில் திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த ‘இந்தியா கூட்டணி’ வெற்றி பெற பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த கூட்டணியில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காளத்தில் தனித்து போட்டியிடும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மம்தா பானர்ஜியின் இந்த அறிவிப்பு இந்தியா கூட்டணியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறுகையில், ‘வரும் நாடாளுமன்ற தேர்தலில் மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும். தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் யாருடனும் நான் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. மேற்குவங்காளத்தில் தனித்து போட்டியிட முடிவெடுத்துள்ளோம்.

மேற்குவங்காளத்தில் நாங்கள் தனித்து போட்டியிடுவோம் என நான் எப்போதும் கூறுவேன். நாட்டில் இனி என்ன நடக்கபோகும் என்பது பற்றி நான் கவனத்தில் கொள்வதில்லை, ஆனால் நாங்கள் மதச்சார்பற்ற கட்சி. மேற்குவங்காளத்திற்கு நாங்கள் பாஜகவை தனியே வென்றுவிடுவோம்’ என்றார்.

More in இந்தியா

To Top