நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் பாஜக அதற்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இன்று சென்னைக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக சென்னை கோவிலாம்பாக்கத்தில் தென்சென்னை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அமித்ஷா “9 ஆண்டு சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். கடந்த காலங்களில் தமிழகத்தில் இருந்து இரண்டு பிரதமர்களை தவறவிட்டுள்ளோம். அதற்கு காரணம் திமுகதான். வரும் காலங்களில் ஒரு தமிழரையாவது பிரதமராக்க உறுதி ஏற்போம்” என அவர் கூறினார்.