அரசு பேருந்து ஓட்டுநர்கள், கனரக வாகன ஓட்டுநர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என கேரள அரசு அறிவித்துள்ளது.
சாலை விபத்துகளில் நாள்தோறும் ஏற்படும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வர உள்ளது.
வாகனங்களின் முன் இருக்கையில் அமர்ந்திருப்பவரும், சீட் பெல்ட் அணிய வேண்டும் எனவும் பிற மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கும் இது பொருந்தும் எனவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆண்டனி ராஜு தெரிவித்துள்ளார்.