களைகட்டிய ஓணம் பண்டிகை!

கேரளாவில் சிங்கம் என்ற பெயரில் ஆவணி மாதம்தான், மலையாள ஆண்டின் முதல் மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த சிங்கம் மாதத்தில் அஸ்தம் நட்சத்திரத்தில் அத்தப்பூ கோலத்துடன் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்களுக்கு சாதி, மத வேறுபாடுகளை மறந்து ஓணம் பண்டிகையை கேரள மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த 10 நாட்களிலும் 10 வகை பூக்களை வைத்தும் அத்தப்பூ கோலம் போட்டும் பெண்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.. அந்தவகையில், இன்றைய தினம் ஓணம் பண்டிகை கோலாகலமாக கேரளாவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

கேரள மக்கள் அதிகாலையிலேயே எழுந்து வீடடு முன்பு அத்தப் பூ கோலம் போட்டு கொண்டாட்டங்களை தொடங்கி விட்டனர். அனைவரும் புத்தாடை அணிந்து கோயிலுக்கு சென்று வழிபாடுகளை நடத்தி வருகிறார்கள்.

தமிழகத்திலும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டன.

RELATED ARTICLES

Recent News