கிருஷ்ண பரமார்த்த நரசிம்மர் அவதாரம் எடுத்து இரணிய அரசனை கொன்ற நிகழ்வை வட மாநிலத்து மக்கள் ஹோலி பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று சென்னையில் உள்ள சௌகார்பேட்டை பகுதியில் ஹோலி பண்டிகையானது விமர்சையாக கொண்டாடப்பட்டது.
அதில் வட மாநிலத்து மக்கள் மற்றும் தமிழர்களும் கலந்து கொண்டு ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடிகளை தூவியும் தண்ணீரை அடித்துக் கொண்டும் இனிப்புகள் வழங்கியும் ஹோலி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.