மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சென்ற கார் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து ஏற்பட்டத்தில் தலையில் லேசான காயம் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொல்கத்தாவுக்கு சாலை மார்க்கமாக காரில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு இருக்கிறது. மோசமான வானிலை காரணமாக அவர் ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்து விட்டு காரில் சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது.