Connect with us

Raj News Tamil

பாஜக வேட்பாளருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்.. வாக்குச்சாவடி மையத்தில் பரபரப்பு..

இந்தியா

பாஜக வேட்பாளருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்.. வாக்குச்சாவடி மையத்தில் பரபரப்பு..

மேற்கு வங்க மாநிலம் காடல் நாடாளுமன்ற தொகுதியின் தற்போதைய எம்.பியாக இருப்பவர், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தீபக் அதிகரி. இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு அன்று நடைபெற்ற தேர்தலில், 7 லட்சத்து 17 ஆயிரத்து 959 வாக்குகள் பெற்று, பிரம்மாண்ட வெற்றி பெற்றிருந்தார்.

இந்நிலையில், இந்த முறையும், திரிணாமூல் காங்கிரஸ் சார்பில், அவரே தான் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் ஹிரன் சட்டர்ஜி என்பவரும், CPI சார்பில் டபன் கங்குலியும் போட்டியிடுகின்றனர்.

இந்த தொகுதியில், இன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலையொட்டி, தேர்தல் பூத்களை, பாஜகவின் ஹிரன் சட்டர்ஜி பார்வையிட்டு வருகிறார். இதற்கிடையே, இவரை எதிர்த்து, பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும், நெருப்பை கொழுத்தி, பாஜகவின் வேட்பாளர் வந்த பாதையில் வீசி எறிந்து, தங்களது எதிர்ப்பை காட்டியுள்ளனர். இதன்காரணமாக, காவல்துறையினர் அவரது வருகையை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து பேசிய ஹிரன் சட்டர்ஜி, “எங்களுடைய கட்சியின் தொண்டர்கள், காவல்துறையினரால், தாக்கப்படுகின்றனர். அவர்கள், வாக்குச் சாவடி முகவர்களை, வாக்குச்சாவடி மையத்தில் அமர விட மாட்டேங்கிறார்கள்.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து, காவல்துறை பணியாற்றி வருகிறது. காவல்துறை மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி என்னை தோற்கடிக்க முயற்சி செய்து வருகிறது. ஆனால், நாங்கள் வாக்காளர்கள் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறோம்” என்று கூறினார்.

இந்த சம்பவம் குறித்து பேசிய CRPF-ன் DIG டி.எஸ்.க்ரேவால், “நாங்கள் தற்போது சம்பவ இடத்தில் தான் இருக்கிறோம். இந்த பிரச்சனை என்ன என்பதை, பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என்று கூறினார்.

More in இந்தியா

To Top