என்ன கொடுமை சார்.. அடி பம்ப்-உடன் கான்கிரீட் சாலை..! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

அண்மைக்காலமாக சாலையில் நிறுத்தப்பட்டிருக்கும் டூ-வீலரோடு தார் சாலை மற்றும் கான்கிரீட் சாலை அமைப்பது வாடிக்கையாகிவிட்டது.

அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு வேலூரில் முதல்வர் ஸ்டாலின் வருகையை ஒட்டி அவசர அவசரமாக கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது. அப்பொது சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தோடு சாலை அமைக்கப்பட்ட சம்பவம் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளானது.

இந்நிலையில் சாலையின் ஈரம் காய்வதற்குள் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே இதே போன்று சம்பவம் நடந்துள்ளது. பொள்ளாச்சி சூலேஸ்வரன்பட்டி பேரூராட்சியின் 12-வது வார்டுக்கு உட்பட்ட சாலையில் வடிகால் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது.

அங்குள்ள ஆழ்குழாய் கிணற்றோடு கான்கிரீட் சாலை போட்டு,பாதி அளவுக்கு மூடியிருப்பது பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பயன்படுத்த முடியாத அளவிற்கு சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

RELATED ARTICLES

Recent News