நீண்ட எதிர்பார்ப்புக்கு பிறகு, விஜயின் லியோ திரைப்படம், கடந்த 19-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியானது.
ஆனால், ரசிகர்கள் மத்தியில் இருந்த பாதி எதிர்பார்ப்பை கூட, அந்த திரைப்படம் பூர்த்தி செய்யவில்லை. பெரும்பாலும் நெகட்டிவ் விமர்சனங்கள் மட்டுமே அந்த படத்திற்கு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், லியோ ரிலீசுக்கு பின்னர், விஜயின் ரியாக்ஷன் என்ன என்று, தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் சாதனை படைத்திருப்பதால், விஜய் மகிழ்ச்சி அடைந்துள்ளாராம். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தான், கூறியுள்ளார்.