பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தங்கலான்.இப்படத்தில் பார்வதி திருவொத்து, பசுபதி, மாளவிகா மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
படப்பிடிப்பின் போது விக்ரமிற்கு விலா எலும்பு முறிவு ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தங்கலான் படப்பிடிப்பின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் தெரிவித்துள்ளது.