டெபாசிட் இழந்த நாம் தமிழர், தேமுதிக! டெபாசிட் என்றால் என்ன? விரிவாக பார்க்கலாம்!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல், கடந்த 27-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, நேற்று காலை தொடங்கப்பட்டு, மாலை முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

இதில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், 1 லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். அதற்கு அடுத்த இடத்தில், அதிமுக வேட்பாளர் 43 ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்தார்.

ஆனால், தேமுதிகவின் வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் மேனகா உட்பட, இடைத்தேர்தலில் போட்டியிட்ட 77 வேட்பாளர்களும், டெபாசிட்டை இழந்தனர்.

டெபாசிட் இழப்பது என்றால் என்ன?

சட்டமன்ற தேர்தல் நடைபெறும்போது, ஒவ்வொரு வேட்பாளர்களும், ரூபாய் 15 ஆயிரம் பணத்தை, முன்பணமாக செலுத்த வேண்டும். அதுதான் டெபாசிட் என்ற அழைக்கப்படுகிறது.

ந்த டெபாசிட் தொகை, வெற்றி பெற்ற வேட்பாளருக்கு திருப்பி வழங்கப்படும். அதேபோல், தோல்வி அடைந்த வேட்பாளருக்கும், அந்த தொகை திருப்பி வழங்கப்படும். ஆனால், அந்த வேட்பாளர், அந்த தொகுதியின் ஒட்டுமொத்த வாக்குகளில், 6-ல் ஒரு பங்கு வாக்கையாவது பெற்றிருக்க வேண்டும்.

ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலில், 28-ஆயிரம் வாக்குகள் தான், டெபாசிட் தொகையை பெறுவதற்கான வாக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தென்னரசு ஆகியோரை தவிர, மற்ற யாரும், இந்த அளவிலான வாக்கு எண்ணிக்கையை பெறவில்லை..