Connect with us

Raj News Tamil

அஜித்திற்கும், V என்ற எழுத்திற்கும் என்ன சம்மந்தம்..?

சினிமா

அஜித்திற்கும், V என்ற எழுத்திற்கும் என்ன சம்மந்தம்..?

அஜித்தின் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம், வலிமை ஆகிய படங்கள் v என்ற எழுத்திலேயே ஆரம்பிக்கும். அப்படி வியில் தொடங்கும் படங்களும், அவருக்கு வெற்றியை தந்தது.

இந்நிலையில், அஜித் படங்களுக்கு பெயர்களை பரிந்துரைக்கும் ஜோசியர், டாக்டர்.அம்பானி ராஜா, சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், அஜித்திற்கும், வி என்ற எழுத்திற்கும் என்ன சம்மந்தம் உள்ளது என்று கேள்வி எழுப்பபட்டது.

அதற்கு பதிலளித்த அவர், அஜித்தின் கடக ராசிக்கு லாபகரமான ராசியான ரிஷப ராசியில் வரும் வி என்ற எழுத்து வெற்றியை தரும் என்ற அடிப்படையிலேயே அப்படி பெயர் வைத்தோம் என்று கூறினார்.

மேலும், உடல் அளவிலும் மனதளவிலும் அஜித் தயார்படுத்திக் கொள்வதாலேயே, விடாமுயற்சி, தாமதமாகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

More in சினிமா

To Top