ரெட் அலர்ட் Vs ஆரஞ்சு அலர்ட்..! வித்தியாசம் என்ன?

செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை, வடகிழக்கு பருவமழை பெய்து வருவது வழக்கம். இந்த மாதங்களில், அதிகப்படியான கனமழை பெய்வதால், மக்களை எச்சரிக்கைப்படுத்துவதற்கு, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு அலர்ட்டுகளை, வானிலை மையம் விடுத்து வருகிறது. ஆனால், இந்த ஒவ்வொரு நிறத்திற்கும், என்னென்ன வித்தியாசங்கள் உள்ளது என்பது, பலருக்கும் தெரியுமா என்பது கேள்விக்குறி தான். அந்த வித்தியாசங்கள் என்ன என்பதை, தற்போது நாம் தெரிந்துக் கொள்ளலாம்..

மழை எச்சரிக்கைகளின் படிநிலைகள்:-

பச்சை எச்சரிக்கை

மஞ்சள் எச்சரிக்கை

ஆரஞ்சு எச்சரிக்கை

சிவப்பு எச்சரிக்கை

    பச்சை எச்சரிக்கை:-

    இந்த நிற எச்சரிக்கையை நீங்கள் செய்தி ஊடகங்களில் பார்க்க முடியாது. ஏனென்றால், இந்த வகையானது, சாதாரண மழையின் அளவை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. அதாவது, அதிகபட்சமாக 64 மில்லி மீட்டர் என்ற அளவுக்கும் குறைவாக மழை பெய்தால், பச்சை எச்சரிக்கை என்று அழைப்பார்கள். இது ஒரு சாதாரண மழை பொழிதலை குறிக்கிறது.

    மஞ்சள் எச்சரிக்கை:-

    பச்சை எச்சரிக்கைக்கு அடுத்த நிலையில் இருப்பது தான் இந்த மஞ்சள் எச்சரிக்கை. இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டால், 64.5 மில்லி மீட்டரில் இருந்து 115.5 மில்லி மீட்டர் வரை, மழை பொழிய வாய்ப்பு உள்ளது என்று அர்த்தம். இந்த எச்சரிக்கை விடுக்கும் சமயத்தில், பள்ளமான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால், அந்த பகுதியில் உள்ள மக்கள், வெளியில் பயணம் செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

    ஆரஞ்சு எச்சரிக்கை:-

    ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டால், அந்த சமயத்தில், 115.6 மில்லி மீட்டரில் இருந்து 204.4 மில்லி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலே கூறப்பட்ட 2 எச்சரிக்கைகளை விட, ஆரஞ்சு எச்சரிக்கையின்போது, மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த சமயத்தில், பல்வேறு முன்னேற்பாடுகளுடன் இருக்க வேண்டும். அதாவது, 2-ல் இருந்து 3 நாட்களுக்கு தேவையான பொருட்களை, முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த எச்சரிக்கையின்போது, சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    சிவப்பு எச்சரிக்கை:-

    204.5 மில்லி மீட்டருக்கு மேல் மழை பொழிய வாய்ப்பு உள்ளது என்றால், அந்த சமயத்தில் தான், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படும். இந்த சமயத்தில், மிகமிக அதிக அளவில் கனமழை பெய்யும். தரைப்பகுதியில் உள்ள வீடுகளில் வசித்து வருபவர்கள், தங்களது முக்கியமான ஆவணங்களை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். எப்போது வேண்டும் என்றாலும், வெளியேறுவதற்கு, தயாராக இருக்க வேண்டும். ஏனென்றால், இந்த எச்சரிக்கை விடுக்கப்படும் சமயங்களில், உயிர் சேதமும், பொருட்களின் சேதமும் அதிகமாக ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    RELATED ARTICLES

    Recent News