ரயிலில் இளைஞா் செய்த செயல்! அதிா்ச்சிக்குள்ளாகிய பெண் பயணிகள்!

இந்தியாவிலேயே மிகப்பெரிய புறநகர் ரயில் சேவைகளில் ஒன்று, மும்பை நகரில் இயங்கி வரும் ரயில் சேவை. இதில் நாள் ஒன்றிற்கு 75 லட்சம் பேர் வரை பயணிக்கின்றனர். இந்நிலையில், சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலானது. அதில், கடந்த 18ம் தேதி மாலை 4.30 மணியளவில் ஓடும் ரயிலில் பெண்கள் பெட்டியில் ஏறும் நபர் ஒருவர், படியின் ஓரத்தில் நின்று பயணம் செய்கிறார். மேலும் , சில நிமிடங்களுக்கு ஒருமுறை தன் கையில் வைத்திருந்த கர்சீப்பை எடுத்து வாயில் வைத்து எதையோ உரிஞ்சுகிறார்.

அவரது இந்த நடவடிக்கையை கண்ட அந்த பெட்டியில் உள்ள பெண்கள் அவர் போதை மருந்து எடுத்துக்கொள்கிறார் என்பதை புரிந்துகொண்டனர். இந்த காட்சிகளை கண்ட பெண் பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியுட்டுள்ளாா். அதில் அரசு நிர்வாகம் மாற்றப்பட வேண்டும் என கூறியதோடு, ரயில்வே நிர்வாகமும், மகாராஷ்டிர அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனறும் தெரிவித்திருந்தார்.

இப்பதிவிற்கு பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனா்.

RELATED ARTICLES

Recent News