சிறை கைதிகளுக்கு விஜய் சேதுபதி செய்த காரியம்..! குவியும் பாராட்டுகள்..!

கோலிவுட் சினிமாவின் முன்னணி நாயகனாக வலம் வருபவர் விஜய்சேதுபதி. இவரது நடிப்பில் உருவாகியுள்ள விடுதலை மிதிரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது. இதனிடையே மதுரைக்கு படப்பிடிப்பிற்காக சென்ற இவர், மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கி நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது கைதிகளின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் விதமாக, மதுரை மத்திய சிறையில் ‘சிறை நூலகத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து அறிந்த விஜய்சேதுபதி, சுமார் 1000 நூல்களை சிறைத்துறை அதிகாரியிடம் நேரடியாக வழங்கினார். தற்போது விஜய்சேதுபதியின் இந்த செயலை, ரசிகர்கள், பொதுமக்கள் என அனைவரும் பராட்டி வருகின்றனர்.