மீண்டும் சுனாமி.. பாதிப்பு எப்படி இருக்கும்? கனித்து வைத்த விஞ்ஞானிகள்.. சென்னைவாசிகள் ஷாக்!

கடலில் உள்ள நிலப்பரப்பில் ஏற்படும் பூகம்பத்தின் காரணமாக, அலைகள் மேலே எழுந்து, அது கரையை வந்தடையும் நேரத்தில் பேரலையாக மாறுவது தான் சுனாமி. ஜப்பான், இந்தோனேசியா நாடுகளை சேர்ந்த மக்களுக்கு மட்டுமே பரிட்சயமான சுனாமி, கடந்த 2004-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி முதல், தமிழக மக்களுக்கும் அறிமுகமானது.

அன்றைய நாள் ஏற்பட்ட சுனாமி பாதிப்பால், தமிழகம் முழுவதும் சுமார் 7 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம், இன்றும் தமிழக மக்கள் மனதில் ஆறாத வடுவாக தான் இருந்து வருகிறது.

இந்நிலையில், மீண்டும் சுனாமி வந்தால், அதனை முன்கூட்டியே எப்படி அறிவது என்றும், அப்படி சுனாமி வந்துவிட்டால், என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்றும், தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் ஆய்வு செய்துள்ளது. அதன்படி, மீண்டும் சுனாமி பேரிடர் ஏற்பட்டால், சென்னையில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக, கடலில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை, கடல்நீர் உட்புகும் வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. ECR என்று அழைக்கப்படும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சில இடங்களில் அரை கி.மீ தூரத்திற்கு கடல் நீர் உட்புகும் என்றும் கனிக்கப்பட்டுள்ளது.

மேலும், வடசென்னையில் ராயபுரம், கடற்கரை ரயில் நிலையம், திருவல்லிக்கேணி, கலங்கரை விளக்கம், சாந்தோம் ஆகிய பகுதிகளிலும், கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், கடற்பரப்பில் இருந்து கூடுதல் உயரம் கொண்ட பகுதிகளில், இந்த பாதிப்பு ஏற்படாது என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.