மெட்டா நிறுவனத்தை சேர்ந்த வாட்ஸ்-அப் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள், நேற்று இரவு முடங்கிய போனதையடுத்து, அந்த பிரச்சனை தற்போது சரி செய்யப்பட்டுள்ளது.
உலகின் மிகவும் பிரபலமான சமூக வலைதள நிறுவனங்களில் ஒன்று மெட்டா. இந்த நிறுவனத்தில், போஸ்புக், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் அடங்கியுள்ளன.
இந்நிலையில், நேற்று இரவு, வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் நேற்று Login செய்ய முயற்சி செய்தபோது, அவர்களால் முடியவில்லை. இதுமட்டுமின்றி, வாஸ்ய் கால், வீடியோ கால் போன்ற சேவைகளையும், வாடிக்கையாளர்களால் பயன்படுத்த முடியவில்லை.
இந்தியாவில் 30 ஆயிரம் வாடிக்கையாளர்களும், UK-வில் 67 ஆயிரம் வாடிக்கையாளர்களும், பிரேசிலில் 95 ஆயிரம் வாடிக்கையாளர்களும், இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், அமெரிக்காவில் 3 ஆயிரத்து 200 இன்ஸ்டாகிராம் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வாட்ஸ்-அப் நிறுவனம், எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதில், “சில வாடிக்கையாளர்கள் செயலிகள் முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிந்தோம். இந்த பிரச்சனையை 100 சதவீதம் சரி செய்வதற்காக, நாங்கள் வேலை பார்த்து வருகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே, இந்த பிரச்சனைகள் தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. இதேபோல், இந்த வருடம் மார்ச் மாதம், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் த்ரெட்ஸ் ஆகிய சமூக வலைதளங்கள் முடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.