மதுபோதையில் படுத்திருந்த நபர் கழிவுநீர் கால்வாய்க்குள் விழுந்தால் பரபரப்பு!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மது போதையில் ஒருவர் கழிவு நீரில் விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக நெடுஞ்சாலை துறை சார்பாக கழிவு நீர் கால்வாய் அமைத்தல், சாலை அகலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனால் சாத்தூர் பேருந்து நிலையம் செல்லும் வழியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் வாறுகால் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் மழை நீருடன் சேர்ந்து கழிவு நீர் தேங்கி உள்ளது.

இந்நிலையில், கழிவுநீர் கால்வாய் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தின் அருகில் சாலையோரமாக மது போதையில் படுத்திருந்த நபர் ஒருவர் கழிவு நீர் கால்வாய்க்குள் தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கழிவு நீர் நிரம்பிய கால்வாய் பள்ளத்தில் விழுந்த அந்த நபரை அருகில் இருந்தவர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்டனர்.

மது போதையில் நபர் ஒருவர் பள்ளத்தில் விழும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்கள் வேகமாக பரவி வருகிறது.

RELATED ARTICLES

Recent News