பென் ஸ்டோக்ஸ் பினிஷிங் திறமையை பாக்கும் போது தோனியை பாக்குற மாதிரியே இருக்கு – ரிக்கி பாண்டிங்!

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது 371 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய இங்கிலாந்து அணி 45 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய வேளையில் அந்த அணியின் கேப்டனான பென் ஸ்டோக்ஸ் மிகச் சிறப்பான ஒரு இன்னிங்ஸ்ஸை விளையாடி 155 ரன்கள் அடித்து தனி ஒருவராக வெற்றிக்காக போராடினார்.

ஆனாலும் இங்கிலாந்து அணி இறுதியில் தோல்வியையே தழுவியது. இருப்பினும் அவரது இந்த போராட்டமான இன்னிங்ஸ் பலரது மத்தியில் பெரிய அளவில் பாராட்டினை பெற்றுள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில் : சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் ஒவ்வொரு வீரர்களும் களத்திற்கு செல்லும் போது அழுத்தத்துடனே விளையாடுவார்கள். ஆனால் மற்ற வீரர்களை காட்டிலும் ஸ்டோக்ஸ் மிக இயல்பான ஆட்டத்தை மிடில் ஆர்டரில் வெளிப்படுத்துகிறார். எந்த ஒரு சூழலிலும் இறுதிவரை களத்தில் நின்று போட்டியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் வீரர் என்றால் எனக்கு முதலில் ஞாபகத்திற்கு வருபவர் தோனி தான்.

குறிப்பாக அவர் டி20 போட்டிகளில் இறுதி வரை நின்று பல போட்டிகளை வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்து கொடுத்துள்ளார். அதேபோன்று தற்போது பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிக்காக இறுதிவரை போராடுகிறார். அவரது இந்த ஆட்டம் பாராட்டுக்குரியது என ரிக்கி பாண்டிங் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News