Connect with us

Raj News Tamil

பொங்கல் பரிசு தொகுப்பு எப்போது..? – தமிழக அரசு அறிவிப்பு

தமிழகம்

பொங்கல் பரிசு தொகுப்பு எப்போது..? – தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம். நடப்பாண்டின் பொங்கல் பரிசுத்தொகுப்பிற்காக ரூ.238 கோடி நிதி ஒதுக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பில், பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு போன்ற பொருட்களோடு ரூ.1,000 ரொக்கப்பரிசும் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார். அதன்படி 2 கோடியே 19,57,402 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

இதற்கான டோக்கன் நாளை முதல் ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், வரும் 10-ம் தேதி முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பானது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி 7ம் தேதியிலிருந்து, 9-ம் தேதி வரை டோக்கன்கள் வினியோகிக்கப்பட்டு, பின்னர் 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.

மேலும் 13-ம் தேதிக்குள் பெற முடியாதவர்கள் 14-ம் தேதியன்று பெற்றுக்கொள்ளலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை அட்டை மற்றும் மற்றும் பொருளில்லா அட்டைதாரர்களை தவிர்த்து அனைவரும் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More in தமிழகம்

To Top