அசோக் செல்வன், சரத்குமார் ஆகியோர் நடிப்பில், விக்னேஷ் ராஜா இயக்கத்தில், சமீபத்தில் வெளியான திரைப்படம் போர் தொழில்.
குறுகிய பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம், 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து, சாதனை படைத்தது.
இந்த திரைப்படத்தின் வெற்றியின் காரணமாக, இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் அடுத்த திரைப்படம் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இந்நிலையில், இதுதொடர்பான தகவல், தற்போது வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, வேல்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தை, விக்னேஷ் ராஜா தான், இயக்க உள்ளாராம்.
இந்த திரைப்படத்தின், திரைக்கதை எழுதும் பணி, தற்போது நடந்து வருகிறதாம்.