பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம், பசுபதி, மாளவிகா மோகனன் ஆகியோர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தங்கலான்.
கோலார் தங்க வயலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்த திரைப்படத்தின் ஷீட்டிங், சமீபத்தில் முடிவடைந்தது. தற்போது, இந்த படத்தின் பின்னணி பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தில், மாளவிகா மோகனனின் கதாபாத்திரம் என்ன என்று, அவரிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த அந்த நடிகை, தான் நடித்ததிலேயே , மிகவும் சவாலான கதாபாத்திரம் இதுதான் என்று தெரிவித்தார்.
மேலும், இந்த கதாபாத்திரம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நம்புகிறேன் எனவும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து, படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என்று வேறொரு ரசிகர் கேள்வி கேட்டிருந்தார்.
அதற்கு பதில் அளித்த மாளவிகா, அந்த தகவல் தனக்கு தெரியாது என்றும், அதைப்பற்றி இயக்குநர் பா.ரஞ்சித்திடம் தான் கேட்க வேண்டும் என்றும், அவர் கூறினார்.