தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த தேர்வின் முடிவுகள், கடந்த 8-ஆம் தேதி அன்று வெளியானது. இதில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் நந்தினி, தமிழ் உட்பட அனைத்து பாடப்பிரிவுகளிலும், 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றார்.
அதாவது, 600-க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து, மாநில அளவில் முதலிடம் பிடித்தார். இதனை அறிந்த பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும், அவருக்கு வாழ்த்துக்களை கூறி வந்தனர். இதற்கிடையே, பல்வேறு கல்லூரி நிர்வாகங்கள், நந்தினியை தங்களது கல்லூரிகள் சேர்த்துக் கொள்ள அழைப்பு விடுத்தன.
இதில், எந்த கல்லூரியை மாணவி நந்தினி தேர்ந்தெடுப்பார் என்றும் பலரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். இந்நிலையில், அதற்கான விடை தற்போது தெரியவந்துள்ளது.
அதாவது, கோவை மாவட்டத்தில் உள்ள பி.எஸ்.ஜி என்ற கல்லூரியை தான் மாணவி நந்தினி தேர்வு செய்துள்ளார். இந்த கல்லூரி நிர்வாகம், அந்த மாணவிக்கு தேவையான அனைத்து தேவைகளை செய்து தருவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய மாணவி நந்தினி, “நான் இந்த கல்லூரியில் சேர்ந்தது, எனக்கு மகிழச்சியாக உள்ளது” என்று தெரிவித்தார்.