கடவுள் இருக்காரா இல்லையா? பேய் இருக்கா? இல்லையா? இறந்த பிறகு என்ன நடக்கும்? ஏலியன்கள் உள்ளதா இல்லையா? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு, இன்று வரை பதில் கிடைக்கவில்லை. இதுமாதிரியான கேள்விகளில் ஒன்று தான், கோழி முதலில் வந்ததா? அல்லது முட்டை முதலில் வந்ததா என்பது.
நீண்ட நாட்களாக, இந்த கேள்விக்கான பதிலை கூற முடியாமல் பலரும் திணறி வந்தனர். இந்நிலையில், இதற்கான பதிலை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அதாவது, டெய்லி எக்ஸ்பிரஸ் என்ற இதழ் கட்டூரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், பிரிட்டனின் ஷெஃபீல்ட் மற்றும் வார்விக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பல பேராசிரியர்கள் சேர்ந்து, கோழி மற்றும் முட்டை தொடர்பான ஆராய்ச்சியை நடத்தியுள்ளனர்.
இந்த ஆய்வின் முடிவில், கோழி தான் முதலில் வந்துள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கான காரணம் என்னவென்றால், ஓவோக்லிடின் என்ற புரதம் கோழியின் முட்டையில் உள்ளது. இந்த புரதம் இல்லாமல், கோழியின் முட்டையை உற்பத்தி செய்யவே முடியாது.
இந்த புரதம், கோழியின் கருப்பையில் இருந்து மட்டுமே உருவாகிறது. இதனை வைத்து பார்க்கும்போது, கோழி தான் முதலில் வந்தது என்று தெரியவந்துள்ளது. ஆனால், கோழி எதில் இருந்து வந்தது என்ற கேள்விக்கு பதில் இன்னும் கிடைக்கவில்லை.