உலக அழிவுக்கான ஆண்டு இதுதான்.. கெடு விதித்த விஞ்ஞானி.. அதிர்ச்சியில் மக்கள்..

உலகம் அழியும் காலம் இதுதான் என்று, ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஆண்டை குறிப்பிட்டு வந்திருக்கிறார்கள். 2012, 2022 என்று ஒவ்வொரு ஆண்டும் உலக அழிவுக்கான ஆண்டுகள் என்று சில திரைப்படங்களே எடுத்துவிட்டனர்.

இருப்பினும், அந்த வதந்திகளை கடந்து, இந்த உலகம் இன்னும் உயிர்ப்புடன் தான் இருந்து வந்துள்ளது. இவ்வாறு இருக்க, ஆதித்யா எல்.1 செயற்கை கோளின் திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி, செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

அப்போது, உலகத்தின் அழிவு குறித்து அவர் பேசியுள்ளார். அதாவது, “சூரியக் குடும்பம் உருவாகி ஏற்கனவே 450 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த குடும்பம் செயல்படத் தேவையான எரிபொருள், இன்னும் 500 கோடி ஆண்டுகளில் முடிவடைந்துவிடும்.

அதன்பின், சூரியன் விரிவடைந்துக் கொண்டே வந்து ஒட்டுமாத்த சூரியக் குடும்பத்தையும் ஒழித்துவிடும். இன்னும் 1000 கோடி ஆண்டுகளுக்கு பிறகு, சூரியக் குடும்பமும், புவி உள்ளிட்ட பிற கோள்கள் எதுவுமே இருக்காது” என்று கூறியுள்ளார்.

இதுவரை வதந்திகளாக மட்டுமே கேட்டு வந்த புவியின் அழிவு, தற்போது விஞ்ஞானி ஒருவரின் வாயாலே கேட்டிருப்பது, பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், அந்த அழிவுக்கான காலம் என்பது நீக நீண்டவையாக இருப்பதே, தற்போதுள்ள ஆறுதலான செய்தி…,

RELATED ARTICLES

Recent News