Connect with us

Raj News Tamil

தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகும் 7 முக்கிய திரைப்படங்கள்!

சினிமா

தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகும் 7 முக்கிய திரைப்படங்கள்!

வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி அன்று, சித்திரை திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்திற்கு பிறகு, தொடர்ச்சியாக விடுமுறை இருப்பதால், பல்வேறு படங்கள் வெளியாக உள்ளது. இதுவரை, 7 படங்கள் அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் தேதி அறிவித்துள்ளன.

அதன்படி, யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள யானை முகத்தான், ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன், விஜய் ஆண்டனி நடித்துள்ள தமிழரசன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள சொப்பன சுந்தரி, அருள்நிதி நடித்துள்ள திருவின் குரல், மகேந்திரன் நடித்துள்ள ரிப்பப்பரி, சமந்தா நடித்துள்ள சகுந்தலம் ஆகிய 7 படங்கள் வெளியாக உள்ளது.

இன்னும் நாட்கள் இருப்பதால், ரிலீஸ் ஆகும் படங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரையரங்குகளில் இல்லாவிட்டாலும், ஓடிடி தளங்களிலாவது திரைப்படங்கள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top