காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி, நாடாளுமன்ற தேர்தல் நடந்து வருவதையொட்டி, சூறாவளி பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறவேண்டும் என்று கடுமையாக போராடி வருகிறார்.
இந்நிலையில், இடஒதுக்கீடு குறித்து ராகுல் காந்தி பேசிய வீடியோ, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது, அந்த வீடியோவில், ராகுல் காந்தி பேசியது பின்வருமாறு:-
“எது Merit என்ற முடிவை யார் எடுக்கிறார்கள். நான் உங்களுக்கு ஒரு குட்டி ஸ்டோரி சொல்கிறேன். நம்ம ஊரில் JEE தேர்வுகள் இருப்பதை போல, அமெரிக்காவில் SAT என்ற தேர்வு முறை உள்ளது.
முதன்முறையாக SAT தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டபோது, ஒரு வித்தியாசமான சம்பவம் ஒன்று நடந்தது. அமெரிக்காவில் உள்ள அனைத்து வெள்ளை இனத்தவர்களும், அதிக மதிப்பெண்கள் பெற்றார்கள்.
ஆனால், கருப்பினத்தை சேர்ந்தவர்களும், ஸ்பானிஷ் மொழி பேசக் கூடியவர்கள், சிறந்த மதிப்பெண்களை பெறவில்லை.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய ராகுல், “ லத்தீன் மற்றும் கருப்பினத்தை சேர்ந்தவர்கள் தகுதியற்றவர்குள் என்று அங்குள்ள பல்வேறு பெரிய கல்வியாளர்கள் கூறினார்கள். அவர்களால், இந்த பாடத்தை புரிந்துக் கொள்ள முடியவில்லை என்றும் கூறினார்கள்.
இப்படியே வருடங்கள் சென்றது. ஒரு நாள், ஒரு பேராசிரியர் அறிவுறுத்தியதையடுத்து, SAT தேர்வுக்கான வினாத்தாள், கருப்பினத்தவர்களால் உருவாக்கப்பட்டது. அதன்பிறகு, என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியுமா? அனைத்து வெள்ளை இனத்தவர்களும் தேர்வில் தோல்வி அடைந்துவிட்டார்கள்” இவ்வாறு ராகுல் பேசியதும், அங்கிருந்தவர்கள் கைதட்டி தங்களது ஆரவாரத்தை எழுப்பினர்.
தொடர்ந்து, “யார் இந்த அமைப்பை கட்டுப்படுத்துகிறார்களோ, அவர்கள் தான் Merit என்ன என்பதை முடிவு செய்கிறார்கள் என்பது, இதன்மூலம் தெளிவாகிறது. நீங்கள் விவசாயியின் மகனாக இருந்து, நான் அதிகாரவர்கத்தின் மகனா இருக்கிறேன் என்றால், நீங்கள் தேர்வு வினாத்தாளை தயாரித்தால், நான் தோல்வி அடைவேன்” என்று கூறினார்.
“ஐஐடி தேர்வுகள், உயர் சாதியை சேர்ந்தவர்களால் தயாரிக்கப்படுகிறது. அதனால் தலித்துகள் தோல்வி அடைகிறார்கள். எனவே, தலித்துகள் வினாத்தாளை தயாரிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இவரது இந்த பேச்சு, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு ஆதரவாக பலர் பேசி வந்தாலும், ஒருசிலர் ராகுல் காந்திக்கு எதிராக தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.