உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக இருக்கும் ரஜினியின் 170வது படத்தை டி.ஜே.ஞானவேல் இயக்கவுள்ளார். அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில் , மஞ்சு வாரியர் ஆகியோரும் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இந்த படத்தில் மேலும் இரண்டு நடிகர்கள் இணைகிறார்கள் என்று தகவல் கசிந்துள்ளது. அதாவது, நடிகர் ராணாவும், நடிகை துஷாரா விஜயனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.