2024-ஆம் ஆண்டுக்கான வாக்கு எண்ணும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதில், ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை, தேசிய ஜனநாயக கூட்டணியும், இண்டியா கூட்டணியும், மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றன.
இந்நிலையில், 11 மணி நேர நிலவரப்படி, யார் முன்னிலை என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, கூட்டணி கட்சிகள் இல்லாமல், பாஜக மட்டும் 233 தொகுதிகளில் போட்டியிட்டது.
இதில், 232 தொகுதிகளில், அது முன்னிலை வகித்து வருகிறது. இதேபோல், கூட்டணி கட்சிகள் இல்லாமல், காங்கிரஸ் மட்டும் 98 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில், 98 இடங்களிலும், காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகின்றது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் முன்னிலை விவரங்களை ஒட்டுமொத்தமாக பார்த்தால், 290 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதேபோல், இண்டியா கூட்டணியின் முன்னிலை விவரங்களை பார்த்தால், 227 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.