அதிகம் சம்பளம் வாங்கும் இந்திய நடிகர்களின் பட்டியலை, ஃபோர்ப்ஸ் இந்தியா என்ற பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, 300 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும், நடிகர் அல்லு அர்ஜூன், முதலிடம் பிடித்துள்ளார்.
இதையடுத்து, 130 கோடி ரூபாயில் இருந்து 275 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் நடிகர் விஜய், இந்த பட்டியலில் 2-ஆம் இடம் பிடித்துள்ளார். இவரைத் தொடர்ந்து, 125 கோடி ரூபாயில் இருந்து 270 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் நடிகர் ரஜினி, 4-ஆம் இடம் பிடித்துள்ளார்.
மேலும், 105 கோடி ரூபாயில் இருந்து 165 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் நடிகர் அஜித், இந்த பட்டியலில் 7-வது இடத்தை பிடித்துள்ளார். இதன்மூலம், தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதலிடத்தையும், இந்திய அளவில் 2-ஆம் இடத்தையும், நடிகர் விஜய் பிடித்துள்ளார்.