Connect with us

Raj News Tamil

லோகேஷ் கனகராஜின் அடுத்த ஹீரோ யார்?

சினிமா

லோகேஷ் கனகராஜின் அடுத்த ஹீரோ யார்?

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது G Squad என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

மேலும், தனது உதவி இயக்குநர்கள், நண்பர்களின் படங்களை தயாரிக்கவும் உள்ளார்.

இந்நிலையில், இவரது தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்கும் முதல் ஹீரோ யார் என்பது தொடர்பான தகவல் கிடைத்துள்ளது.

அதாவது, இயக்குநர் விஜய் குமார் தான், லோகேஷ் தயாரிக்கும் முதல் படத்தில், ஹீரோவாக நடிக்க உள்ளாராம். இவர், உறியடி, உறியடி 2 ஆகிய படங்களை இயக்கி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top