“யாரு டா நீ..” “ஜப்பான்.. Made in India ” – ரசிகர்களை கவர்ந்த ஜப்பான் பட அறிமுக வீடியோ!

வித்தியாசமான கதைக் களங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஒருசில நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன், சர்தார் போன்ற படங்கள் பெரிய வெற்றியை பெற்றது.

இந்நிலையில், இவர் அடுத்ததாக ஜப்பான் என்ற படத்தில் நடித்து வருகிறார். ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் அறிமுக வீடியோ, இன்று கார்த்தியின் பிறந்த நாளை யொட்டி வெளியாகியுள்ளது.

அதில் இடம்பெறும் கார்த்தியின் வசனம், ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதாவது, “டேய் யாருட நீ” என்று ஒருவர் கேட்க, அதற்கு பதில் அளிக்கும் கார்த்தி, “ ஜப்பான்.. மேட் இன் இந்தியா” என்று நக்கலாக பதில் அளிக்கிறார்.

இதுமட்டுமின்றி, இந்த வீடியோவில் இடம்பெற்றிருந்த கார்த்தியின் உடை, மேனரிசம் போன்றவை, ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.