லோகேஷ் கனகராஜின் அடுத்த ஹீரோ இவரா?

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என்று தொடர் வெற்றிப் படங்களை கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது ரஜினியை வைத்து கூலி என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படம், வரும் ஆகஸ்டு 10-ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு பிறகு, கைதி 2 என்ற படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார்.

இந்நிலையில், இந்த இரண்டு படங்களுக்கு பிறகு, லோகேஷ் கனகராஜ் யாருடன் கூட்டணி சேர உள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, பிரபாஸ், தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகிய 3 பேரில், யாராவது ஒருவருடன், லோகேஷ் கனகராஜ் இணைய இருக்கிறாராம். குறிப்பாக, தனுஷ் அல்லது சிவகார்த்திகேயன் உடன் அவர் கூட்டணி வைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News