தமிழகத்தின் புதிய டிஜிபி யார்? – எதிர்பார்ப்பை எகிற வைக்கும் யூகங்கள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைக்கப்பட்டபோது, ஒவ்வொரு துறைகளிலும், புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அந்த வகையில், தலைமை செயலாளராக வெ.இறையன்பும், தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநராக சைலேந்திரபாபுவும் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், டிஜிபி சைலேந்திரபாபுவின் பதவிக்காலம், வரும் 30-ஆம் தேதியோடு நிறைவு பெற உள்ளது. இதனால், அடுத்த டிஜிபி யார் என்ற கேள்வி, அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டம் ஒன்றில், புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

இந்த பட்டியலில், டெல்லி காவல் ஆணையர் சஞ்சய் அரோரா, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், முன்னாள் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், தீயணைப்பு துறை இயக்குநர் ஆபாஷ் குமார், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இயக்குநர் சீமா அகர்வால், ஊர்காவல் படை டிஜிபி பி.கே.ரவி,

மின்வாரிய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஜிபி கே.வன்னிய பெருமாள், சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் புஜாரி, ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், மத்திய உளவுத்துறை தென்மண்டல இயக்குநர் டி.வி.ரவிசந்திரன், இந்தோ- திபெத் எல்லை காவல்படை டிஜிபி ராஜீவ் குமார் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.

மேற்குறிப்பிட்ட பட்டியலில் உள்ளவர்களில், 3 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அதில், யார் எந்தவொரு சர்ச்சைகளிலும் சிக்காமல் இருந்தார்களோ, பிளேக் மார்க் எதுவும் இல்லாமல் இருந்தார்களோ அவர்களை தமிழ்நாடு டிஜிபியாக நியமிக்கும் சூழல் இருந்து வருகிறது. அடுத்த டிஜிபி யார் என்ற தகவல், வரும் 28-ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News