தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், பாஜகவும், அதிமுகவும் கூட்டணி அமைக்க இருப்பதாக, அரசியல் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக மாநில தலைவராக உள்ள அண்ணாமலை, அந்த பதவியில் இருந்து நீக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்காக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை பதவியில் இருந்து மாற்ற, தேசியத் தலைமை முடிவு செய்திருப்பதாக தகவல் பரவி வருகிறது.
புதிய தலைவராக, பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.