லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். AI மூலம் உருவாக்கப்பட்ட இளமையான விஜயின் பாடல்காட்சியுடன் இப்படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது.
பிரபுதேவா, பிரசாந்த், ஜெய், மாதவன் போன்ற பிரபலங்கள் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் மேலும் இரண்டு பிரபலங்கள் இப்படத்தில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, தெலுங்கு பட நடிகை மீனாட்சி சௌத்ரியும், 80ஸ் ஹீரோவான மைக் மோகனும் லியோ படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
மேலும், பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை விஜயதசமி அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.