ரியல் பொங்கல் வின்னர் யார்? வெளிப்படையாக சொன்ன திருப்பூர் சுப்ரமணியன்!

அஜித்தின் துணிவு திரைப்படமும், விஜயின் வாரிசு திரைப்படமும், கடந்த 11-ஆம் தேதி வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதில், எந்த திரைப்படம் அதிக வசூலை குவித்தது என்று இருதரப்பு ரசிகர்களும், சமூக வலைதளங்களில் சண்டை போட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன், யார் ரியல் பொங்கல் வின்னர் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், தமிழகத்தை பொறுத்தவரை, இரண்டு படங்களும் ஒரே மாதிரியான வசூலை தான் ஈட்டியுள்ளது என்று கூறியுள்ளார். மேலும், கொஞ்சம் விவரமான ஆடியன்ஸ்-க்கு துணிவு திரைப்படம் பிடித்துள்ளது என்றும், சாதாரண ஆடியன்ஸ்-க்கு வாரிசு திரைப்படம் பிடித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News