விஜே மகேஸ்வரியின் புதிய காதலர் இவரா?

பல்வேறு சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவர் விஜே மகேஸ்வரி. இவர், சென்னை – 28 இரண்டாம் பாகம், ரைட்டர் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவர், தனி ஆளாக தனது மகனை வளர்ந்து வருகிறார்.

தற்போது, பிக்-பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுள்ள விஜே மகேஸ்வரி, சிறப்பாக விளையாடி வருகிறார். இந்நிலையில், இவருக்கும், இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டுள்ள ராம் ராமசாமி என்ற போட்டியாளருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக நெட்டிசன்கள் பலரும் பரபரப்பாக பேசி வருகின்றனர்.

குறிப்பாக இருவரும் தனியாக பேசிக்கொண்டிருக்கும்போது, “எல்லோரிடமும் இப்படி ஸ்வீட்டாக பேசவீர்களா” என்று ராம் ராமசாமியிடம் மகேஸ்வரி கேட்கிறார்.

இதற்கு பதில் அளித்த ராம், “உங்களிடம் மட்டும் தான் இப்படி இருப்பேன்” என்று கூறுகிறார். இந்த காட்சியை வைத்து தான், இருவருக்கும் இடையே காதல் மலர்வதாக நெட்டிசன்கள் சந்தேகத்துடன் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், போக போக தான் இருவரும் காதலர்களா? நண்பர்களா? எதிரிகளா? என்பது தெரியவரும்..