பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, அஜித் நடித்த விடாமுயற்சி திரைப்படம், நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இந்த திரைப்படம், ரசிகர்களை பெருமளவில் ஏமாற்றியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்திற்கு பிறகு, வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அன்று, குட் பேட் அக்லி என்ற திரைப்படம், அஜித்தின் நடிப்பில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்திற்கு பிறகு, அஜித் யாருடன் கூட்டணி வைக்க உள்ளார் என்ற கேள்வி, ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
இந்நிலையில், இதுகுறித்து அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவிடம் சமீபத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த அவர், 3 மாதங்களுக்கு பிறகு தான் அடுத்த பட இயக்குநர் யார் என்பது உறுதியாகும் என்று தெரிவித்துள்ளார். பெரும்பாலும், அது இயக்குநர் விஷ்ணு வர்தனாக இருக்க வாய்ப்பு உள்ளது.