அடுத்த முதல்வர் யார்? விஜய்-க்கு கிடைத்த அமோக வரவேற்பு!

சமூக பொருளாதார ஆராய்ச்சி, மக்களின் கருத்துக் கணிப்புகள், அரசியல் பகுப்பாய்வு செய்யும் நிறுவனம் தான் சி-வோட்டர். இந்த நிறுவனம், தற்போது கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது. அதில், தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

இந்த கருத்துக் கணிப்பில், 27 சதவீதம் பேர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து, 18 சதவீதம் பேர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்-க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பின்னர், அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு 10 சதவீதம் ஆதரவு கிடைத்துள்ளது. இறுதியாக, 9 சதவீத ஆதரவுடன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, 4-வது இடத்தில் உள்ளார்.

தமிழக அரசியலில் முக்கிய கட்சியாக பார்க்கப்படும் நாம் தமிழர் கட்சி, இந்த பட்டியலில் இடம்பெறவில்லை. கட்சி ஆரம்பித்து, முதல் தேர்தலை கூட சந்திக்காத தமிழக வெற்றிக் கழகம், 2-வது இடத்தில் இருப்பது, பலருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News