ஒரு சில கடையில் விற்கப்படும் ஆப்பிள்களில் மட்டும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருக்கும். இவை விலை உயர்ந்த பழங்கள் அல்லது தரமான பழங்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் உண்மை அது கிடையாது.
பொதுவாக ஆப்பிள்களில் இருக்கும் ஸ்டிக்கர்கள் பழத்தின் தரம், அவை எப்படி வளர்க்கப்படுகிறது என்பதை குறிக்கிறது. அதனை விளக்குவதற்காக சில எண்களும் இடம்பெற்று இருக்கும்.
4 இலக்க எண்கள் இருந்தால் அந்த பழங்களில் பூச்சிக்கொல்லிகள் மற்றும் இரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை குறிக்கிறது.
5 இலக்க எண்கள் இருந்தால் அந்த பழங்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்டவை என்பதற்கான அர்த்தம் ஆகும். அந்த பழங்கள் இயற்கையானவை அல்ல.
ஆப்பிள்களில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்கள் நமது உடல் ஆரோக்கியத்துடன் தொடர்புடையவை. எனவே ஆப்பிள் வாங்கும் போது அதில் உள்ள ஸ்டிக்கரை படித்து பார்த்து வாங்குங்கள்.