மணிப்பூர் வன்முறை : பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? – காங்கிரஸ் கட்சி கேள்வி

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு இனக்குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நம் மாநிலத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி அமைதி குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களை அமைத்துள்ளார். எனினும் ஆங்காங்கே தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து கருத்து கூறியுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் “நாடு சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மணிப்பூர் மாநில விவகாரம் உருவாகி இருக்கிறது. அதுவும் அண்டை நாடான சீனா அருகில் இருக்கக்கூடிய எல்லை மாநிலமான மணிப்பூரில் இத்தகைய வன்முறை ஏற்படுவது அதிக ஆபத்து நிறைந்தது என்று அவர் கூறியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஏன் தொடர்ந்து அமைதி காக்கிறார் எனவும் ஏன் இன்னும் மணிப்பூர் மாநிலத்திற்கு நேரில் செல்லவில்லை” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News